Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1000 கிலோ எடையுள்ள ஏமன் கோலா வகை…. வலையில் சிக்கிய 3 ராட்சத மீன்கள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 பேர் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் வலையில் 12 அடி உயரமும், 1050 கிலோ எடையும் உடைய 3 மீன்கள் சிக்கியுள்ளது. இவை  ராட்சத ஏமன் கோலா வகை மீன்கள் ஆகும். இதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ராட்சத மீன்களை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Categories

Tech |