Categories
அரசியல் மாநில செய்திகள்

1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு…. ஒரு நியாய விலை கடையா…? அமைச்சர் சொல்வது என்ன…???

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.13) கேள்வி நேரத்தின் போது பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையைப் பிரித்து, கிறித்தவ தெரு பகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரிப்பது தொடர்பாக அரசின் பரிசீலனையில் உள்ளது.

சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஒரே நியாயவிலைக் கடைகளில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கிறது. எங்கெல்லாம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் கடைகள் பிரிக்கப்படும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு முழு நேர நியாயவிலைக் கடை அமைக்க ரூ.3 லட்சம் செலவாகும் சூழலில், சொந்த கட்டடங்களும் கட்டப்பட வேண்டிய தேவை உள்ளது. உணவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையுடன் ஆலோசித்து விரைவாக பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

Categories

Tech |