மேகதாது அணை திட்டத்திற்காக கர்நாடக பட்ஜெட்டில் ரூ 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2022-23 ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் மேகதாது திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.