Categories
தேசிய செய்திகள்

1000 செடிகள் வளர்த்து வாறேன்…. வெப்பம் இங்கே கம்மியா இருக்கு…. பசுமை இல்லம் உருவாக்கிய நபர்….!!!!

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஷாகஞ்ச் பகுதியில் சந்திரசேகர் சர்மா வசித்து வருகிறார். இவர் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் பணி ஓய்வுக்கு பிறகு அவர் மேற்கொண்ட முயற்சி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அதாவது அவர் 6,300 சதுரடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி, கொடிகளை வளர்த்து வருகிறார். அதில் பூக்கள் மற்றும் கனிகள் காய்த்து குலுங்குகின்றன. 300 வருடங்கள் பழமையான அவரது வீடு, மாசுபாடு இல்லாத பசுமை இல்லமாக உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக கவரப்பட்ட அக்கம் பக்கம் வசிப்பவர்கள் உள்ளிட்ட உள்ளூர்வாசிகள் பலர் இவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

மேலும் ஜப்பான், ஜெர்மனி மற்றும் வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். இதுகுறித்து சந்திரசேகர் கூறியதாவது, “மாசுபாடு இல்லாத ஒரு பசுமை இல்லம் உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும். இதற்காக 40 வருடங்களாக திட்டங்களை சேகரித்து வந்தேன். இப்போது மொத்தம் 400 வகையான செடிகள் இருக்கின்றன. என்னுடைய வீட்டின் வெப்பம் நிலை, மற்ற வீடுகளிலலுள்ள வெப்பநிலையை விட 5 டிகிரி குறைவாக இருக்கும்.

அத்துடன் காற்றுதர குறியீடும் வெளியிடங்களிலுள்ள அளவை விட நன்றாக இருக்கிறது. இந்த பசுமை இல்லம் மாதிரியை நகர்முழுதும் 50 வீடுகளில் அமைக்கவும் அவர் உதவியுள்ளார். செடி, கொடிகள் மற்றும் மரங்களை என் குழந்தைகள் போன்று நேசிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். என்னுடைய வீட்டில் ஏறக் குறைய காலியாக கிடந்த அனைத்து பகுதிகளிலும் செடி, கொடிகளை  வளர்த்து வருகிறேன். என்னுடைய செடிகள் இப்போது பூக்க தொடங்கியுள்ளன” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |