Categories
உலக செய்திகள்

1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடு…. உலகை உலுக்கிய சம்பவம்…. மன்னிப்பு கோரிய போப் ஆண்டவர்….!!!!

கனடாவில் பழங்குடியின குழந்தைகள் கத்தோலிக்க திருச்சபை நடைபெறும் உறைவிட பள்ளிகளில் கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சுமார் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்பு கூடுகள் அந்தப் பள்ளிகளின் அருகில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் இந்த அநீதிக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

நேற்று வாடிகனில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், “நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். கனடாவில் நடந்த சம்பவத்திற்காக பேராயர்களுடன் இணைந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தான் கனடா நோக்கி செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |