ஆயிரம் ரூபாயை வைத்து ஒரு சிலிண்டராது வாங்க முடியுமா? என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “வார்த்தைக்கு வார்த்தை நான் பாடுபடுகிறேன் என்று கூறுகிறார். அது அவர் சொல்வது தான். முதல்வர் என்னவாக பாடுபடுகிறார் என்பதில்தான் உள்ளது. முதல்வர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களைப் போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும். 80 சதவீத பிரச்சினைகளை, திட்டங்களை செய்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். பிறகு ஒரு கூட்டத்தில் 70 சதவீத பிரச்சினைகளை சரி செய்துவிட்டு கூறுகிறார். 70 % இல்லை 7 பிரச்சினையாவது அவர் தீர்த்தாரா?
எதற்கு ஆயிரம் வழங்கும் திட்டம் .ஆயிரம் கொடுப்பதற்கு பதிலாக கொடுக்கும் கல்வியை தரமாக கொடுங்கள். எங்களுக்கு படிக்க காசு தேவை இல்லை. அப்பா அம்மா வறுமையில் உள்ளார்கள் என மாணவிகளை கையேந்த வைப்பது புதுமை அல்ல. ஆயிரம் ரூபாயை வைத்து ஒரு சிலிண்டர் ஆவது வாங்க முடியுமா? இது ஆட்சி கிடையாது, திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பல்லாயிரம் கோடியில் விளம்பரம் மட்டும் தான் நடக்கின்றது” என்று அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.