Categories
தேசிய செய்திகள்

1000 ரூபாயை வைத்து லட்சாதிபதி ஆகலாம்….. இதோ சூப்பர் திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து நாம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது பணத்தை நாம் சேமிப்பதற்கு மிகச்சிறந்த வழி. இதில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமில்லாமல் இதில் வரிவிலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்பு தொகையை நீங்கள் இதில் செலுத்தி வந்தால் மிகப்பெரிய லாபத்தை உங்களால் பெற முடியும், தற்போதைய நிலையில் பிபிஎஃப் திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி கிடைக்கின்றது. பொது வருங்கால நிதி திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர் உங்கள் சேமிப்பு பணம் முழுவதையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

தேவைப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். பிபிஎஸ் திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் திட்டத்தின் முதிர்வு காலம் முடிந்து, பெரிய தொகையை ஈட்ட முடியும். இந்த திட்டத்தில் ஒரு மாதத்திற்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் சேமிக்கிறார்கள் என்று வைத்தால், உங்களின் முதிர்வு காலத்தில் 1.8 லட்சம் வரை கிடைக்கும்.

அதாவது தினமும் 34 ரூபாய் சேமித்தால் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என 15 ஆண்டுகளுக்கு சேமித்தால் கூட டெபாசிட் செய்யும் மொத்த தொகை 1.80 லட்சம் ஆகும். உங்களுக்கு வட்டியாக கிடைக்கப் போவது 1.45 லட்சம் ஆகும். பின்னர் உங்களுக்கு மொத்தமாக 3.25 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தால் உங்களுக்கு 5.32 லட்சம் கிடைக்கும். இப்படி ஐந்தந்து ஆண்டுகளுக்கு முதலீட்டை நீட்டித்து பெரிய தொகையை ஈட்ட முடியும்.

Categories

Tech |