Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1000 வருடங்களுக்கு மேல் பழமையான கல்வெட்டுக்கள்… மதுரை மாவட்டத்தில் கண்டுபிடிப்பு…!!

மதுரையில் பழமை வாய்ந்த மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் இருந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்குடி ஊராட்சிக்குடபட்ட செங்கமேடு பகுதியில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் செங்கமேடு பகுதியில் இருக்கும் பழமையான கிணறு ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் அங்கு உள்ள கற்களில் பழமை வாய்ந்த தமிழ் மற்றும் வட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இருந்ததாக தெரிகிறது.

இந்த நூற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கல்வெட்டுக்கள் என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் சத்திரத்தின் தரையிலும் கிணற்றின் உள்ளேயும் 8 துண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருது பெயருடன் தொடங்கும் முதலாம் ராஜராஜ சோழனுடைய பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது.

Categories

Tech |