டெல்லியில் தவித்துக் கொண்டு இருந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களை அழைத்துச்செல்ல 1000 பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டன, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லி வேலை செய்து வந்த உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் மாநிலத்துக்கு செல்ல போக்குவரத்து இன்றி தவித்து வந்தனர். மேலும் நடந்தாவது தங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் பலரும் நடக்க தொடங்கினர்.
மொத்தமாக சென்றால் கொரோனா தொற்று பரவும் என்பதால் அவர்களை உத்தரப்பிரதேசம் – டெல்லி எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் டெல்லி முதல்வரை தொடர்புகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொழிலளார்களை மீட்க ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.