Categories
மாநில செய்திகள்

“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…!!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதாவது, காணொலி மூலம் பிரதமருடன் பேசிய  முதலமைச்சர், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து விளக்காம் கொடுத்தார்.

தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக கொரோனா இறப்பு விகிதம் 1.62 சதவிகிதமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா பரிசோதனைக்கு தினசரி 6 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவாகி வரும் நிலையில், இதில்  சரிபாதியை மத்திய அரசு கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். இதனைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும், பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் தமிழக அரசுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |