சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் காவல்துறை சரகம் ஆதிச்சனூர் துரிஞ்சல் ஆற்றின் கரையோரத்தில் காவல்துறையினர் தீவிர அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அதை தரையில் கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்டம் பாளையத்தில் வசிக்கும் சுரேஷ் மற்றும் குமார் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.