Categories
உலக செய்திகள்

வருடத்திற்கு” 1000 பேர்”… இஸ்லாமிய மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு… அரங்கேறும் கொடுமைகள்..!!

இஸ்லாமிய மதத்திற்கு வலுக்கட்டாயமாக ஆயிரக்கணக்கான பெண்கள் மாற்ற படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

பாகிஸ்தானில் சிறுபான்மை சிறுமிகள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பெண்கள் இஸ்லாமிய முறையில் மாற்றப்படுகின்றன. அதாவது கடத்தல்காரர்கள் சிறுமிகளை துப்பாக்கி முனையில் கட்டாயமாக அழைத்துச் சென்று அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி ஒரு வயதான நபருடன் அந்தப் பெண்ணை விட பல மடங்கு வயதானவர்களுடன் திருமணம் செய்து வைக்கின்றனர்.

அப்படி கட்டாயம் திருமணம் செய்யப்படும் பல பெண்கள் மதமாற்றத்திற்கு உட்பட்ட பெண்களாக உள்ளனர். இதில் எடுத்துக்காட்டாக 14 வயது சிறுமியான நேகா என்கின்ற கிறிஸ்துவ பெண்ணை கட்டாயமாக்கி மதமாற்றத்திற்கு உட்படுத்தி கடந்த ஆண்டு 45 வயதான ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அந்த நபருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தனது சகோதரரை நீதிமன்றத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டியதால் இன்னும் பயந்து தான் வாழ்ந்துவருகிறார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவி வருவதால் பெரும்பான்மையான பெண்கள் வீட்டில் இருக்கின்றனர். அப்போதும் கூட இதுபோன்ற விஷயங்கள் நடந்து கொண்டு வருகின்றது, இது யாரும் வெளிச்சத்திற்கு கொண்டு வர மாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |