செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடு முழுவதும் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் வழங்கப்படுவது குறித்து, பாரதிய ஜனதா கட்சியினுடைய கொள்கையாக தேசிய தலைவரோ, யாருமே இன்னும் எந்த கருத்தும் சொல்லவில்லை இலவசத்தை பற்றி. இது பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காக போட்டுள்ளார். அதில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.
இதில் பாரதிய ஜனதா கட்சியினுடைய பல தலைவர்கள் உட்பட இந்த இலவசங்களால் குறிப்பாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று நிறைவேற்ற முடியாத பொய் விஷயங்களால் ஜனநாயகம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நான் கட்சியினுடைய பாலிசி மேஷரா, ஒரு கட்சியினுடைய தேசிய தலைவர் சொல்லுவதை இந்த நேரத்தில் நான் சொல்லுவது சரியாக இருக்காது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகையை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இப்போது உங்களுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி கையில் பணம் இருக்கிறது, கல்விக்கு பணம் கொடுத்து விட்டேன், லான் ஆர்டருக்கு பணம் போய்விட்டது, சுகாதாரத்திற்கு பணம் இருக்கிறது எல்லாம் போய் என்னிடம் ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் கூடுதலாக இருக்கிறது என்றால், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கின்ற பணம் எங்கிருந்து அந்த பணம் போகிறது, அதனால் எந்த துறை பாதிக்கிறது. அதனால் நாடு எங்கு பின்னோக்கி போகிறது. இதுதான் சுப்ரீம் கோர்ட்டினுடைய இந்த பிஏஎல் உடைய சாராம்சம் என தெரிவித்துள்ளார்.