மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் ஆயிரம் டன்கள் எரிபொருள்களுடன் சென்ற கப்பல் நடு கடலில் மூழ்கியதால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வணிகக் கப்பல் ஒன்று 1000 டன்கள் எரிபொருள்களுடன் சென்றிருக்கிறது. அப்போது துனிசியா நாட்டின் கேப்ஸ் கடற்கரைக்கு அருகில் சென்ற சமயத்தில் கப்பல் திடீரென்று கடலில் மூழ்கிவிட்டது. எனவே, கடலின் சுற்றுசூழலில் மாசு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது.
எனினும், அதிலிருந்த ஊழியர்கள் 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வானிலை மோசமாக இருந்ததால் கடலுக்குள் கப்பல் மூழ்கியது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.