பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்பை நாள்தோறும் பதிவு செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும், இதனை கட்டுப்படுத்த பல்வேறு சிரமங்களை பல நாடுகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இது வரையில்,
குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான கொரோனா பதிவுகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்தது ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்திய அரசாங்கமும், மக்களும் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.