ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற தடகள போட்டியில் உட்காண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் தடகள போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 10,000 மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த வீரர் ஜோசுவா செப்டெகி 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் இலக்கை அடைந்து, உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2005 இல் எத்தியோப்பியாவின் கெனெனிசா பெகேலா 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் இலக்கை அடைந்திருந்தார். இந்த சோதனையை தற்போது ஜோஷுவா முறியடித்துள்ளார்.