தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், விளம்பரங்களை அகற்றும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலுக்கான விதிமுறைகளும் உடனே அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை மாநகராட்சியின் எல்லைகளுக்கு உட்பட்ட மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள கட்சியின் விளம்பரங்கள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ,சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிவாரியாக போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. சென்னையில் சுமார் 10 ஆயிரம் இடங்களிலுள்ள போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் 228 இடங்களிலுள்ள போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. இதேபோல் 84 இடங்களிலுள்ள மின்கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த கட்சிக் கொடிகளும் அகற்றப்பட்டன.
அதிகப்படியாக தி . நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 700 இடங்களில் அப்புறபணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதிகளில் உள்ள 90 இடங்களில் இருந்த போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன. சென்னை மாநகரில் அமைந்துள்ள மொத்தம் 335 இடங்களை உள்ள மின்கம்பங்களில் இருந்த கட்சி கொடிகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
6,900 போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த அப்புறபணியை பற்றி மாநகராட்சி அதிகாரி கூறுகையில், தற்போது தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ‘பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் பேனர்களை ஓட்டுவதும் சுவர் விளம்பரங்களும் தேர்தல் விதிமுறையை மீறியதாகும்’ . இதனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மீறினால் அக்கட்சியினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரித்தார்.