Categories
தேசிய செய்திகள்

‘10,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்’….. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காவல் துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிய காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி காவல் துறையில் 2015ல் காவலர் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு தற்போதுதான் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதில் வயது வரம்பு கடந்ததால் பலருக்கும் வருத்தம் இருந்தாலும் காவலர் தேர்வு நியாயமான முறையில் நடந்து வருகின்றது.

மேலும் காலியாக உள்ள 1500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் அறிவித்தபடி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Categories

Tech |