Categories
தேசிய செய்திகள்

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் 10,000 ரூபாய் அபராதம்- மாநில போக்குவரத்து துறை!!

வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் மாநில போக்குவரத்துத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும்போது செல் போன்களைப் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது. புதிய விதிகளின் கீழ், வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துபவர்ளுக்கு 10,000 அபராதம் விதிக்கப்படும். மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“வாகனம் ஓட்டும் போது செல்  போன்களைப் பயன்படுத்தினால் ₹.10,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும். உத்தரபிரதேச அரசு ஜூன் மாதம் இந்த ஆணையை நிறைவேற்றிய பின்னர் ஜூலை 30, வியாழக்கிழமை அன்று  மாநில போக்குவரத்து துறை வெளியிட்ட  அறிவிப்பு” என்று ANI ட்வீட் செய்துள்ளது. செல் போன்களைப் பயன்படுத்துவது தொடர்பான WHO அறிக்கையில், ” ஒரு மொபைல் போனைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் ஒரு டிரைவர் தொலைபேசியைப் பயன்படுத்தாத நேரத்தை விட விபத்தில் சிக்குவதற்கு ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

Categories

Tech |