இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு நிலை ஊழியர் என 10,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை மையமாக தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய மிகப்பெரிய நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 12,000 பேருக்கு வேலை இழப்பு செய்தது. அதில் 5 ஆயிரம் பேரை மீண்டும் வேலையில் சேர்த்த நிலையில் 7,000 பேருக்கு வேலை கிடையாது வீட்டுக்கு போங்க என்று சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை காலியாக போகிறது. அதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.
அதாவது 10,000 பேர் வேலை பறிபோகிறது அதுவும் தலைமை , உயர் பதவி வகிக்கும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் , இரண்டாம் நிலையில் இருப்பவர் 3000 பேர் , கடை மட்டத்தில் இருக்க கூடிய 7000 பேர் என 10 ஆயிரத்திலிருந்து 12,000 பேருக்கு வேலை இழப்பு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கான நோட்டீஸ்ஸை நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறது. இது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இவை இரண்டுமே பிரபலமான நிறுவனம் ஆகும்.
இன்போசிஸ் இந்தியாவின் மிக பிரபலமான நிறுவனம் , அதே போல காக்னிசன்ட் சர்வதேச அளவிலும் பிரபல நிறுவனம். இந்த இரண்டு நிறுவனங்களும்10,000 , 15,000 பேர் என்று வேலையை விட்டு அனுப்புவது நிச்சயமாக ஐடி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற ஐடி ஊழியர்களும் தங்களின் வேலை பறி போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார மந்தநிலை, சில பணி ஒப்பந்தங்கள் மாற்றப்பட்டு உள்ளதால் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இன்போசிஸ் நிறுவனத்த்தை பொறுத்தவரை உற்பத்தி குறையும் போது இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது வாடிக்கையான ஒன்றுதான் என்று அவர்கள் பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் தற்போது ஒட்டுமொத்தமாக நிலவி வரும் பொருளாதார மந்தநிலை என்று கூறினாலும் , அந்த நிலை மட்டுமல்ல மற்ற அழுத்தங்கள் காரணமாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நிச்சயமாக ஐடி துறை ஊழியர்களைளிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.