ராமநாதபுரத்தில் கள்ளுக்கடை ஒன்றில் காவலர் ஒருவர் போதையில் ரூ10,000 லட்சம் கேட்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம்குமார். இவர் அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கள்ளு கடையில் பனை மர கள்ளை வாங்கி குடித்து ருசி பார்த்து உள்ளார்.
பின்னர் மண்பானை குடத்தில் மீதம் இருந்த கள்ளை பாட்டிலில் நிரப்பியவாறு, சட்டவிரோதமாக கடை நடத்தியவரிடம் பத்தாயிரம் ரூபாய் தருமாறு லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ஏட்டாக பணிபுரிந்து வந்த ராம்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டர்.