வார சந்தையில் ஒரே நாளில் 1,00,000 ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பேரூராட்சி சார்பாக ஆடு சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆடுகளை வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் கூட்டம் அலைமோதி வருவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சந்தை இயங்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்த காரணத்தினால் வார சந்தைகள் திரும்பவும் செயல்பட தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து பக்ரீத் பண்டிகை வருவதற்கு சில நாட்கள் இருக்கின்றது. இதனால் வார சந்தையில் ஆடுகளுடன் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூட்டமாக திரண்டு வந்துள்ளனர். பின்னர் வியாபாரம் வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 5,000 முதல் 13,000 வரை ஆடுகள் விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ஒரே நாளில் 1,00,000 கோடி ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.