Categories
உலக செய்திகள்

10,00,000 பிணங்கள்….. மிரட்டும் Hart Island… அதிர வைக்கும் வரலாறு …!!

மரணத்தை உணர்வு நிலையில் அணுகுவதை விடவும், தத்துவார்த்த நிலையில் நின்று அணுகும் போது கிடைக்கும் ஆறுதல் இதம். ஆனால் மரணத்தை எளிய மனிதர்கள் அனைவராலும், தத்துவார்தமாக பார்க்க முடியாது. வாழ்வு குறித்து அனுபவத்தில் தீண்டிடாததொரு மனதிற்கு மரணம் என்பது துன்பமே அன்றி, வேறு இல்லை.

கொரோனா யுத்தத்தில் கொத்து கொத்தாக மனிதர்கள் செத்து விழும் துயர காலத்தை நாம் கடந்தோம். காலமானது கேலரி ரசிகனாக அமர்ந்து இந்த காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது. கொரோனா எனும் வைரஸால் உலகமே திறந்தவெளி சடங்காக மாறி விடுமோ என ஒருபுறம் அஞ்சினாலும், இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில், நாம் ஒவ்வொருவரும் இந்த நோயை எதிர்த்துப் போராடினோம்.

தற்போது உலக அளவில் இந்த நோயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து இருக்கிறது. வளர்ந்த நாடுகள் பலவும் கூட இந்த நோயின் கோரப்பிடியில் சிக்கின. சர்வ பலம் கொண்ட நாடாக தன்னை கருதும் அமெரிக்காவின் கெண்டைக்கால் நரம்பில் அடி விழுந்தது. அங்கு இறப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. அந்த நாட்டில் செத்து விழும் மனிதர்கள் கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது ஹார்ட் தீவு. 131 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தீவில், கொரோனா பாதிப்பால் இறந்த கேட்பாரற்ற மனித பிணங்கள் புதைக்கப்பட்டன. 1869 முதல் தற்போது வரை ஒரு மில்லியன் பிணங்கள் ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு வரை அந்த தீவில் குடிமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உரிமை கோரப்படாத கேட்பாரற்று போகும் பிணங்களே இந்த தீவில் பெரும்பாலும் புதைக்கப்படும்.

நவம்பர் 14ஆம் தேதி 2019 அன்று நியூயார்க் நகர சபையானது  ஹார்ட் தீவை பொதுமக்கள் பார்வையிடவும், மக்கள் அங்கு வந்து போகவும் வசதியாக ஒரு பூங்கா அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. அந்த தீவின் 150 ஆண்டு காலக் கெடுபிடிகள் டிசம்பர் 4 2019ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்த நிலையில்,  ஹார்ட் தீவை பொதுமக்கள் பார்வையிட ஜூலை 1, 2021 முதல் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கொரோனாவால் உயிரிழப்போர் பலரும் அங்கு கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டதால் இந்த அனுமதி மீண்டும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஒரு சிலர்.ஒரு நாளைக்கு 25 பிணங்கள் வரை அங்கு புதைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹார்ட் தீவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்நிலம் குறித்த பல தகவல்கள் கிடைக்கின்றன.

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு புதைக்கப்பட்டவர்களின் விவரங்கள் அந்த இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் தீவின் எந்த பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரமும் அதில் கிடைக்கிறது. பிணங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்னை கொண்டு, நாம் அந்த இணையதளத்தில் விவரங்களைப் பெறலாம் என்றாலும், பலரது பின குறியீட்டு எண் அனாதைப் பிணம் என்று அறிவிக்கிறது. 1980 – 90களில் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பலர் உயிரிழந்தனர்.

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் எட்டப்படாத அந்த சமயத்தில், அந்த நோயால் இருந்த பலரும் ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டனர்.எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் கல்லறையானது ஹார்ட் தீவின் இணையதளத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. 1985 – 86 காலகட்டத்தில் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்கள் தனித்தனி கல்லறைகளில் அங்கு புதைக்கப்பட்டனர். அச்சத்தின் காரணமாக 14 அடி வரை ஆழமாக குழி தோண்டப்பட்டு,  எய்ட்ஸ் நோயாளிகளை புதைத்தனர்.

1992ல் புகைப்பட கலைஞர்கள் ஜோயில் மற்றும் மெலிண்டா ஆகியோர் ஹாட் தீவில் புகைப்படம் எடுக்க அனுமதிக்க பட்டனர். எய்ட்ஸ் நோயால் இறந்து போன நியூயார்க்கின் முதல் குழந்தை ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டது. டேவிட்லேன் இசையில் உருவான பாடல் ஒன்று ஹார்ட் தீவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஜஸ்ட் என்ற பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இதுவரை வாழ்க்கை மீது உங்களுக்கு இந்த ஆணவ அபிமான கோணத்தை அசைத்துப் பார்க்கும்.

நான்  என்ற ஆணவத்தை அழித்து அட போங்கடா… பொல்லாத வாழ்க்கை என்று சொல்லவைக்கும். அந்தப் பாடலின் காட்சிகள் ஆனது ட்ரான் மூலம் கழுகு கோணத்தில் ஹார்ட் தீவை நமக்கு காட்டுகிறது. லோன் லீனஸ் இன் ய பியூட்டிஃபுல் பிளேஸ் என்ற வரி, அந்த பாடல் வீடியோவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆம் தனிமை அழகானதுதான்… மரணம் என்பது பூரணம் தானே.

Categories

Tech |