மத்திய மாநில அரசுகளிடம் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்கக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். அதில்,
தமிழகத்தில் 1,020 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கின் காரணமாக கிட்டத்தட்ட 151 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால், அங்கே பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து தவிப்பவர்கள் என மூன்று லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதேபோல்,
தியேட்டர்கள் திறக்காததால் படப்பிடிப்பு ஏதும் நிகழ்த்தப்படவில்லை. இதன் காரணமாக 10 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இவர்களை கணக்கில் கொண்டு தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் தான் எங்களது முதலாளிகள் அவர்களை பாதுகாப்பாக பத்திரமாக பார்த்துக்கொள்வது எங்களது உரிமை மற்றும் கடமை. எனவே மத்திய மாநிலஅரசின் விதிமுறைகள் அனைத்திற்கும் கட்டுப்பட்டு செயல்பட தயாராக இருக்கிறோம். விதிமுறைகளை வகுத்து தியேட்டரை திறக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.