தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2019ம் ஆண்டுஇரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு காவலர்கள் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10,070 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளி பணிகள் துறை காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையை, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.