திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாலாம் கட்டளை பகுதியில் வட பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது.
அப்போது மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். மேலும் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு 1008 தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றுள்ளது.