கோவிலில் நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆசிரமம் கிராமத்தில் ஏழு முக காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.