தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாரத ரத்னா காமராஜர் கலையரங்கத்தில் வைத்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற 1008 திருவிழாக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
Categories