தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் முதல்முறையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,333 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.47% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 2,000ஐ நெருங்கியது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 0.884% ஆக உயர்ந்துள்ளது.