கன்னியாகுமரி மாவட்டத்தில் குகநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் புரட்டாசி மாத நட்சத்திரம் தண்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது.
இதனை அடுத்து 1008 சங்குகள் சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை செய்ய ப்பட்டு பின்னர் குகநாதீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி மூன்று முறை வளம் வந்தனர். இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். மேலும் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் சிறப்பாக செய்தனர்.