100 சதவீதம் கட்டணம் செலுத்த கோரி கட்டாயப்படுத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குறித்து 8ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 17ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மீறும் வகையில் சில பள்ளிகள் கட்டணம் கூறுவதாக நீதிமன்றம் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 17-ம் தேதி நீதிபதிகள் அறிக்கை கோரி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறிய பள்ளிகளின் பட்டியல் அவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.