Categories
திருச்சி மாநில செய்திகள்

“அத்தியாவசிய பொருள்” வாகன பறிமுதல் கூடாது…… திருச்சியில் தொழிலாளர்கள் போராட்டம்…!!

திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள குட்செட் யாரட்க்கு நாள்தோறும் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் வந்து சுமை தூக்கும் தொழிலாளர்களால் இறக்கப்பட்டு பின் லாரியில் ஏற்றி அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக சுமார் 350க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்வதால் லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் குட்செட் யார்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடு பணிபுரியும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அவர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் வந்து பணிபுரிந்து விட்டு பின் வீட்டிற்கு செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி சுமைதூக்கும் தொழிலாளர்களின் வாகனங்களை காவல்துறையினர் தொடர்ந்து பறிமுதல் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும்,

இதனால் தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். வாகனங்களை பறிமுதல் செய்யும் காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய கூடாது என்று கூறியும் 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி பின் வாகனங்களை பறிமுதல் செய்ய கூடாது என்று உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Categories

Tech |