பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.
105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையில் 32.8 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதிக்கு நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 26 ஆவது முறையாக நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. 102 அடியை எட்டிய பிறகு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.