Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101  தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய  என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்திய நிறுவனங்களுக்கு இந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் வாய்ப்பும் கிடைக்கும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவிலே உற்பத்தியை பெருக்க வேண்டும், இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.அதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு துறை இந்த முடிவை எடுத்திருக்கிறது.

பாதுகாப்பு துறை என்பது நாட்டில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ஒன்று. ராணுவம், விமானப்படை, கப்பற்படை என்று பல்வேறு விதமான உட்கட்டமைப்பு வசதிகள் என பல லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 101 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதில் இந்தியாவில் உற்பத்தி செய்தால்,  ஒரு பக்கம் அன்னியச் செலாவணியில் மிச்சப்படும். இன்னொருவர் இந்திய நிறுவனங்களுக்கு புதிதாக தொழில் வாய்ப்பு அதன் மூலம் வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்படும் ஆகவே தான் இந்த முடிவை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |