தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.
தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.