Categories
மாநில செய்திகள்

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியாகியது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே 6- 30 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9- 31 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5- மே 28 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பங்களை மார்ச் 9 முதல் 16 ஆம் தேதி வரை காலை 10 -5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று பெற்று கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல முடியாதவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம்.

வரும் 16-ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய முடியாத தனித்தேர்வர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதப்போகும் தேர்வர்கள் 500 ரூபாய் கட்டணமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வர்கள் 1000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |