தமிழகத்தில் கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு தாமதமாக திறக்கப்பட்டன. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் பொது தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்படவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வர் சொன்னதுபோல் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்ததை தேர்வில் நம்பிக்கையுடன் எழுதுங்கள்.
தேர்வு குறித்து மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் போது பதற்றம் அடையாமல் இருப்பதற்காகத்தான் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே மாணவர்கள் பொறுப்புடன் இப்பொழுதே படிக்க தொடங்குங்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.