Categories
அரசியல்

10,11,12 பொதுத்தேர்வு வினாத்தாள்… தேர்வுத்துறை இயக்குனரகம் விளக்கம்…!!!!

பத்து முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் எந்த பாடத்திட்டத்தில் அமையும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டின் போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்வு இந்த பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள்கள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி அமைத்திருக்கும்.

எனவே  இந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றனர் என  அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றறிக்கை உடன் தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

Categories

Tech |