Categories
மாநில செய்திகள்

10,11,12 ம் வகுப்பு மாணவர்களின்…. வங்கிகணக்கை உடனே அனுப்ப…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் வழியாக படித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களும் கட்டாயம் கல்வி கற்றல் வேண்டும், இளமையின் காரணமாக படிப்பை நிறுத்தி விடக்கூடாது எனப்து அரசின் நோக்கம். எனவே உயர்கல்வியின் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகை பெற தகுதியான மாணவர்கள் வங்கிக்கணக்கு உள்ளிட்ட முழு விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூபாய் 1,500, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 2000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |