Categories
மாநில செய்திகள்

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு….!!!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வு நடக்க வேண்டும் என்று கல்வித் துறை தெரிவித்திருந்தது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை தேர்வுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பொது தேர்வில் முறைகேடு இன்றி நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து அவர் கூறியதாவது: “10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதுவதை தடுப்பதற்காக 3500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது. தற்போது நடந்து முடிந்த இரண்டு திருப்புதல் தேர்வுகளில் குறிப்பிட்ட பாடங்களில் மட்டுமே கேள்வி இடம் பெற்றுள்ளதால், பொது தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறுவது முறையாக இருக்காது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |