ரமலான் பண்டிகை நாட்களில் நடக்க இருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது மாநிலம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இதனையடுத்து ரமலான் பண்டிகை நாட்களில் (மே 13,15) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதாக வெங்கடேசன் எம்பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து எம்பி கோரிக்கையை ஏற்று ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த தேர்வு தேதிகளை மாற்றம் செய்து சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.