சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும், பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கடந்த மாதம் வெளியிட்டார். இதனையடுத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வுகளுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் பிப்ரவரி 22 முதல் 25 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் சிபிஎஸ்இ- க்கு அனுப்பக்கூடாது. மேலும் விண்ணப்பிக்கும்போது தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்குமேல் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.