தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்றது இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக் கல்வித்துறையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற உலக பெண் குழந்தைகள் தின விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்று பாதிப்பினால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்.அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் பொது தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை முதலமைச்சா் அனுமதி பெற்று கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.