10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் கால அட்டவணையை மாநில அரசு வெளியிட்டு வருகின்றன. இதனிடையில் ICSE தேர்வு வாரியங்களும் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடுமோ என்ற பயத்துடன் மாணவர்களை நேரில் தேர்வை எதிர்கொள்ள வைப்பது நியாயமற்றது எனவும் மனிதாபிமானமற்றது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்டவற்றின் அனைத்து 10, 12ஆம் வகுப்புக்கான நேரடி தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..