Categories
தேசிய செய்திகள்

 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள்… பொதுத்தேர்வு ரத்து… அனைவரும் தேர்ச்சி… முதலமைச்சர் அறிவிப்பு…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி நாடு முழுவதிலும் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ள நிலையிலும், பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை.

இதனையடுத்து மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதன்படி அம்மாநிலத்தில் இந்த வருடம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு கிடையாது என்றும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பள்ளிகள் திறப்பது பற்றி நவம்பர் மாதம் இறுதியில் முடிவு செய்யப்படும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

 

Categories

Tech |