10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை மதியம் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் USER ID மற்றும் PASSWORD ஐ பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 6-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரையும், பொதுத்தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பொது தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக ரெடியாகி வருகிறார்கள்.