நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்லாந்தில் மூன்றாம் நிலை ஊரடங்கும், மற்ற பகுதிகளில் இரண்டாம் நிலை ஊரடங்கும் விதிக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.