Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 102 பேர்…. தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா …!!

தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதித்தவர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 411ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் 309ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 411ஆக அதிகரிப்பு  7 பேர் குணமடைந்த நிலையில் 1580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 484 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் பதிவிட்ட ட்விட்டில், தமிழகத்தில் 2,10,538 பயணிகளை ஸ்க்ரீன் செய்ததாகவும், 23,689 படுக்கை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உள்ளது என்றும், வென்டிலேட்டர்ஸ் 3,396 இருப்பதாகவும், 1,580 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 3,684 ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 3,789 பேருக்கு நெகட்டிவ்வாகவும், 411 பேருக்கு பாசிட்டிவ் என்றும் தெரிவித்தார். 7 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைசசர் இன்னும் 484பேர் இரத்த  மாதிரியின் சோதனை முடிவு வரவேண்டியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |