1021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவர் சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்கள் இன்று முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என மருத்துவர் சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories