Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1027 பேருக்கு கொரோனா தடுப்பூசி…. சிறப்பாக நடைபெற்ற முகாம்….!!!!

கொரானா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது‌. இந்த முகாமில்  முதல் டோஸ் தடுப்பூசி 12-14 வயதிற்குள் 8 பேருக்கும், 15-17 வயதிற்குள் 14 பேருக்கும், 18-44 வயதிற்குள் 17 பேருக்கும், 45 வயதிற்கு மேல் 7 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி 466 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட 511 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 1026 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |